தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், 45 பேர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இருந்து புதிய உருமாறிய வகை வைரஸ் உலக நாடுகள் மத்தியில் பரவி பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த நோய்த்தாக்கம் இந்தியாவிலும் ஆங்காங்கே காணப்படுகிறது. இப்புதிய வகை வைரஸால் பெரிதளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!!
Follow our Twitter Page for More Latest News Updates
இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். தவிர, 45 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த புதிய வகை வைரஸால் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது தான்.