தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு !
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் விகிதம் குறைக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
பணியாளர்கள் குறைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வரும் நாட்களில் இரவுநேர ஊரடங்குகள் அமல்படுத்தப்படலாம். தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் மட்டும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிதல் ஊக்குவிக்கலாம்.
அதே சமயம் அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் பணிபுரியும் விகிதத்தை குறைக்கலாம். கொரோனா தொற்று அதிகமாக பரவக்கூடிய போக்குவரத்தில் தனி மனித இடைவெளியை உறுதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களாகிய பூங்காக்கள், கடற்கரை, கோவில்கள், திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி – கொரோனாவால் ரத்து!!
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முன் வர வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்பட வேண்டும். குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைய வேண்டும். முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்