தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் ??? – உயர்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!

0
தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் - உயர்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!
தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் - உயர்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!
தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் ??? – உயர்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் நடத்தப்படுமா என்று ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கல்லூரி தேர்வுகள் !
கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு எப்போதும் செமஸ்டர் தேர்வுகள், உரிய காலத்தில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று அதனை மாற்றி விட்டது. கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் ?!
ஆன்லைன் வாயிலாக கல்லூரி மாணவர்கள் பயின்று வரும் நிலையில் அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்தல் மையங்கள் ஆக செயல்பட தேவைப்படும் என்பதனால் தேர்வுகளை வரும் மார்ச் மாதத்திலேயே தேர்தலுக்கு முன்னர் முடிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்காக கல்வி காலண்டர் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

TNEB Online Video Course

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here