தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!

0
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 07ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கல்லூரிகள் திறப்பு !

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கல்லூரிகள் திறப்பும் பரிசீலிக்கப்பட்டது.

TN Police “FB Group” Join Now

இந்நிலையில் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி கடந்த டிசம்பர் 02ம் தேதி முதல் முதுகலை மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 07ம் தேதி முதல் அனைத்து பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் !

மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் அவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதனை பின்பற்றியே மாணவர்கள் கல்லூரிகளில் பயில வேண்டும் என கண்டிப்பான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • தமிழகத்தில் முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
  • மேலும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
  • வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். கல்லூரிகளில் நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட வேண்டும்.
  • மாணவர் விடுதியில் ஒரு அறையில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும்.
  • முடிந்தவரை கல்லூரிக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் மாணவர்கள் தங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவர்.
  • கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!