தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் 27.07.2022 அன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம்
பணியின் பெயர் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கிருஷ்ணகிரி மாவட்ட காலிப்பணியிட விவரங்கள்:

உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக கலெக்டர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download
கலெக்டர் அலுவலக கல்வித் தகுதி:
  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பணி முன் அனுபவம்:

கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

30.06.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் 27.07.2022-ந் தேதி மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No.8&10, DRDAவணிக வளாகம், மாவட்ட மைய நூலகம் எதிரில், கிருஷ்ணகிரி – 635 002. தொலைபேசி எண். 04343-292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பங்களை krishnagiri.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here