தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – வாடிக்கையாளர்கள் விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!

0
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி - வாடிக்கையாளர்கள் விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி - வாடிக்கையாளர்கள் விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – வாடிக்கையாளர்கள் விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையுள்ள நகைக்கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனையடுத்து கடன் வாங்கியவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் கூட்டுறவு வங்கிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின் போது முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றினார். வாக்குறுதிகளில் ஒன்றாக கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்களின் மொத்த நகைக்கடன் 85 ஆயிரம் கோடி என்று கூட்டுறவு சங்கத்தினர் கூறுகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) விகிதம் திருத்தம் – ஊதியக்குழு விளக்கம்!

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையில் அனைவரது நகைக்கடன்களும் தள்ளுபடி செய்ய இயலாத நிலையில் அரசு உள்ளது. இதனால் எனவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. 37 வகையான விவரங்களை சேகரிக்க பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்களை இம்மாதம் 16ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். அதனால் வங்கி ஊழியர்கள் நகைக்கடன் வாங்கியவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர். கடனாளிகளின் ஆதார் எண், குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். கடன் பெற்றவர்களின் அனைத்து விவரங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!