தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப்புத்தகங்கள் – முதல்வர் ஸ்டாலின் வெளியீடு!!

0
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப்புத்தகங்கள் – முதல்வர்
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப்புத்தகங்கள் – முதல்வர்
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப்புத்தகங்கள் – முதல்வர் ஸ்டாலின் வெளியீடு!!

தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப்புத்தகங்களை முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இது தவிர கூடுதல் பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மருத்துவ பாடப்புத்தகங்கள்

பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்கள் அனைத்தும் ஆங்கில மொழியை அடிப்படையாக கொண்டிருக்கும். இந்த ஆங்கில வழிக்கல்வி , தமிழ் மொழியில் பள்ளிப்படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு எப்போதும் ஒரு சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவப்படிப்புகளில் சேரும் போது, ஆங்கில மொழியில் பாடங்களை கற்றுக்கொள்வதில் சிக்கல்களை சந்திக்கின்றனர்.

புத்தக மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசாங்கம், மருத்துவ பாடங்களுக்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப்புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 18) வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, சுமார் 30 முதல் 40 மருத்துவ பாடப்புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!