தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் – முதல்வர் அறிவிப்பு !!

3
தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - முதல்வர் அறிவிப்பு !!
தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - முதல்வர் அறிவிப்பு !!

தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் – முதல்வர் அறிவிப்பு !!

தமிழகத்தில் புதிதாக 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பினால் பட்டதாரி இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு !

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை என்பது பல காலமாக இருந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் இதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. தமிழக அரசும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி வருகிறது.

படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது. இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

முதல்வர் அறிவிப்பு !

கொரோனா காலத்தில் ஒப்பந்தம் செய்த 55 புதிய திட்டங்களால் தமிழகத்தில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் குறித்து, “சோதனை மிகுந்த கொரோனா காலத்தில் கூட தமிழகத்தில் 55 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் மூலமாக ரூ.40 ஆயிரத்து 718 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு, 74 ஆயிரத்து 212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றவாறு முதல்வர் அறிவித்து உள்ளார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!