இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி!

0
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி!
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி!
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மரியாதை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஹெலிகாப்டர் விபத்து:

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை அதிகாரிகள் நேரில் வந்து பயிற்சி அளிப்பது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி நடைபெறவிருந்த உயரதிகாரி கூட்டத்தில் பங்கேற்க இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கோயம்புத்தூர் வந்ததடைந்தார் . அவருடன் அவரது மனைவி மற்றும் பைலட்டுகள் உடன் வந்தனர். இவர்கள் 8ம் தேதி காலை 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் உள்ள கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்த போது பிற்பகல் 12:40 மணி அளவில் கடும் மேகமூட்டமான காலநிலை தென்பட்டது.

ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு – குன்னூரில் நடந்தது என்ன? தீவிர விசாரணை!

இதனால் பனி மூட்டம் சூழ்ந்ததை அடுத்து காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்தது. குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கி தீ விபத்து ஏற்பட்டு முப்படை வீரர் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீயில் உடல்கள் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து DNA சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே வங்கியில் அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி உட்பட 13 பேரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தலைமைச் செயலாளர் இறையன்பு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!