தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!

0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் வருகிற 21ம் தேதி உடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. இதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தில் இருந்து தற்போது 10 ஆயிரமாக குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஜூன் 19 முதல் 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் – அமைச்சர் அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடு வருகிற 21ம் தேதி முதல் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 11 மணி அளவில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி நாளை ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் 50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்து சேவைகளை இயக்குவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் முதற்கட்டமாக நகர பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!