வேலை இல்லாதவர்களுக்கான உதவித்தொகை !!

0
வேலை இல்லாதவர்களுக்கான உதவித்தொகை !!
வேலை இல்லாதவர்களுக்கான உதவித்தொகை !!

வேலை இல்லாதவர்களுக்கான உதவித்தொகை !!

தமிழ்நாடு அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி கூறியதாவது 

இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஊனமுற்றோர் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்க இருக்கிறது. எனவே விண்ணப்பிக்காமல் இருக்கும் நபர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சென்று கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு பூர்த்தி செய்திருந்தால் போதும்.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதி

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கடந்த மாதம் 30-ந்தேதி அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும். எந்தவொரு நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here