தேர்வு, நேர்காணல் இல்லாமல் தமிழக ரயில்வே துறையில் வேலை 2021..!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியாகியது. இதில் காலியாக உள்ள General Manager பணிகள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMRL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் General Manager பதவிக்கு ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E / B. Tech (Electrical / Electronics / Mechanical) படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Coaching Center Join Now
- வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது (08.12.2021) 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் தேர்வு நேர்காணல் இல்லாமல் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 22.1.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.