அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு – முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!

0
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு - முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு - முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு – முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக இன்று மறைந்துள்ளதை அடுத்து அவரது இறப்பிற்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இரங்கல்:

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் தமிழக முன்னாள் அமைச்சராக பதவி வகித்தார். தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்று ஜெ ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலம் மீண்டு வந்தார்.

ஆகஸ்ட் 31ம் தேதி வரை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பின்னர், அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 3:42 மணிக்கு அவர் காலமானார். இவரின் மறைவை ஒட்டி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அ.தி.மு.க அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.இ.மதுசூதனன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன்.

TN Job “FB  Group” Join Now

அன்னாரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாக பழகியவர். ஏழை – எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.க.விற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த திரு.மதுசூதனன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக கோவில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்’ – அமைச்சர் துவக்கி வைப்பு!

மேலும், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஒட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும். இதன்படி வருகிற 7ந்தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!