TN 13,331 அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்! முழு விபரம் இதோ!

0
TN 13,331 அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்! முழு விபரம் இதோ!
TN 13,331 அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்! முழு விபரம் இதோ!
TN 13,331 அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்! முழு விபரம் இதோ!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. மேலும் தகுதியானவர்கள் இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் நியமனம்:

தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தமாக 13 ஆயிரத்து 331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கால தாமதமாகும் என்பதால் மாணவர்களின் நலனை அக்கறை கொண்டு தற்காலிகமாக ஆசிரியர்களை பணியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது எந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு இணைந்து நியமித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்கள் இந்த தற்காலிகமாக அரசு பள்ளிகளில் நேரடி நியமனம் பெறவும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக சேர உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் சம்பளமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 10,000 சம்பளமும், முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 12,000 வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

வருங்கால கணவர் குறித்து ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி சொன்ன சுவாரசிய தகவல்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் அவரவர் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு எந்தெந்த பகுதிகளில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மூலமாகவும் தற்காலிகமான காலிப்பணியிடங்களில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு இணைந்து தகுதியானவர்களை நியமனம் செய்வார்கள். மேலும் நியமிக்கப்பட்ட தற்காலிகமான ஆசிரியர்கள் ஒரு ஆண்டிற்கு மேற்குறிப்பிட்டுள்ள ஊதிய அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here