12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் முன்னேற்பாடு பணிகள் – அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவுறுத்தல்!

0
12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் முன்னேற்பாடு பணிகள் - அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவுறுத்தல்!
12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் முன்னேற்பாடு பணிகள் - அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவுறுத்தல்!
12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் முன்னேற்பாடு பணிகள் – அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முறையாக நடக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டது. பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று தமிழக அரசு 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது.

ஆகஸ்ட் 1 வரை 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

மாணவர்களுக்கு மதிப்பீடு முறையில் மதிப்பெண் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான முறைகளும் அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிக்கப்பட்டு ஜூலை மாத இறுதியில் முடுவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து பணிகளும் முன்னதாவே முடிக்கப்பட்டு விட்டதால் முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு வரும் ஜூலை 19ம் தேதி முடிவுகள் வெளியாக இருக்கிறது.

தமிழகத்தில் 3 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – இன்று முதல் தொடக்கம்!

தற்போது தமிழக அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது. எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அவர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி தங்ககள் பள்ளிகளுக்கான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும், அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here