
Tamil Nadu Schools: தமிழக பள்ளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு – அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவு!
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மார்ச் மாதம் தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், தற்போது தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
தேர்வுக் கட்டணம்:
தமிழகத்தில் 2022- 2023ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாதம் வழக்கம் போல் தொடங்கியது. அதன்பிறகு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் முழு வீச்சில் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத்தவிர பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை வளர்க்கும் விதமாக கூடுதலாக எண்ணும் எழுத்தும் போன்ற பல சிறப்பு திட்டங்களின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது.
தமிழக காவல் துறையினருக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் – ஊக்கத்தொகை வழங்க முடிவு!
இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, பாடத்திட்டங்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம்13 தேதியும், செய்முறைத்தேர்வுகள் பிப்ரவரி மாதமும் தொடங்க உள்ளது. இதற்க்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பள்ளிகள் செயல்படுகின்றது. இந்நிலையில், தமிழக அரசு தேர்வுகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் மற்றும் மதிப்பெண் பட்டியல் கட்டணம் ஆகியவற்றை ஜனவரி 5ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் அரசு தேர்வுகள் இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியில் கட்டணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட அரசு தேர்வுகள் இயக்க ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.