தமிழகத்தில் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு 2020 – 2021 கல்வியாண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் !!!!!!!!!

1
tn-11th-12th-new-syllabus-schemes
tn-11th-12th-new-syllabus-schemes

தமிழகத்தில் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு 2020 – 20201 கல்வியாண்டு பாடத்திட்டத்தில் சிறு மாற்றம் !!!!!

தமிழகத்தில் மேல்நிலை முதலாண்டு/ இரண்டாமாண்டு கல்வியில் பகுதி I மொழிப்பாடம் பகுதி II ஆங்கிலம் மற்றும் நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பு மற்றும் விதிகளுடன் கூடிய பாடப் பிரிவுகளில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணாக்கர் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் மேல்நிலை முதலாண்டு/ இரண்டாமாண்டிற்கான அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்பு மற்றும் விதிகள் வடிவமைப்பிற்கான வல்லுநர் குழுவிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரிய நிர்வாகக் குழுக் கூட்டம் 30.08.2019, 31.08.219 மற்றும் 04.09.2019 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் பாடப்பிரிவுகளை ஏற்படுத்தி மேல்நிலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டிற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள 4 முதன்மைப் பாடத் தொகுப்புகளுடன் புதியதாக 3 முதன்மைப் பாடத் தொகுப்புகளை மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டிற்கு, வரும் கல்வியாண்டு முதல் (2020 -2021) அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியக் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள புதிய பாடத் திட்டங்களை கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download New Scheme and Subject System 

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!