தமிழகத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் – சம்பளம்: ரூ.15,435/-

0
தமிழகத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் - சம்பளம்: ரூ.15,435/-
தமிழகத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் - சம்பளம்: ரூ.15,435/-
தமிழகத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் – சம்பளம்: ரூ.15,435/-

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ்‌ பணிக்குத்‌ தகுதியானவர்களைத்‌ தேர்வு செய்வதற்கான முகாம்‌ தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மார்ச் 25 ஆம்‌ தேதி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தஞ்சை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு நாளை நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. ஓட்டுநர் பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பதவிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜிஎஸ்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி சுவாலஜி, பாட்னி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், மருத்துவ உதவியாளர் பதவிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் பணிக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு ஆகிய தேர்வு செயல்முறைகள் நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,235 வழங்கப்பட உள்ளது. தேர்வு எடுக்கப்படுவபர்களுக்கு 10 நாட்கள் பயற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

மருத்துவ உதவியாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு போன்ற தேர்வு செயல் முறைகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,435 ஊதியம் வழங்கப்பட உள்ளது. தேர்வு எடுக்கப்படுவபர்களுக்கு 50 நாட்கள் பயற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் எனவும், மேலும் விவரங்களுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!