டாட்டா நினைவு மையத்தில் 62 காலியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Attendant, Trade Helper ஆகிய பணிகளுக்கு என டாட்டா நினைவு மையத்தில் (TMC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 30.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 62 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | டாட்டா நினைவு மையம் (TMC) |
பணியின் பெயர் | Attendant, Trade Helper |
பணியிடங்கள் | 62 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
டாட்டா நினைவு மையம் காலிப்பணியிடங்கள்:
TMC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Attendant – 39 பணியிடங்கள்
- Trade Helper – 23 பணியிடங்கள்
Attendant / Trade Helper கல்வி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.
Attendant / Trade Helper அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 01 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Attendant / Trade Helper வயது:
- 17.11.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 25 என TMC நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Attendant / Trade Helper சம்பளம்:
இந்த TMC நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
TMC தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை!
TMC விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PWBD / Female / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.300/-
TMC விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (17.11.2023) https://tmc.gov.in/Non_Medical/frm_Registration.aspx என்ற இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.