மத்திய அரசில் 22 காலிப்பணியிடங்கள் – ரூ.67,700/- வரை மாத ஊதியம்..!

0
மத்திய அரசில் 22 காலிப்பணியிடங்கள் - ரூ.67,700/- வரை மாத ஊதியம்..!
மத்திய அரசில் 22 காலிப்பணியிடங்கள் - ரூ.67,700/- வரை மாத ஊதியம்..!
மத்திய அரசில் 22 காலிப்பணியிடங்கள் – ரூ.67,700/- வரை மாத ஊதியம்..!

டாடா நினைவு மையத்தில் (TMC) காலியாக உள்ள Quality Manager, Scientific Assistant, Medical physicist போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Memorial Centre (TMC)
பணியின் பெயர் Quality Manager, Scientific Assistant, Medical physicist and Others
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

டாடா நினைவு மையம் பணியிடங்கள்:

டாடா நினைவு மையத்தில் (TMC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Quality Manager – 01
  • Scientific Officer C (Pathology) – 01
  • Medical physicist C – 01
  • Assistant Nursing Superintendent – 02
  • Female Nurse A – 01
  • Scientific Assistant B (Programmer) – 02
  • Scientific Assistant B (Radiodiagnosis) – 01
  • Scientific Assistant B (Radio Therapy) – 02
  • Scientific Assistant B (Central Sterile Supply Dept.) – 01
  • Technician A (OT/ ICU) – 09
  • Technician C (Central Sterile Supply Department) – 01
TMC கல்வி தகுதி:

Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் Diploma முடித்தவராகவும் இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Science / Biotech / Microbiology / Botany / Zoology / Applied Biology / Biochemistry / Nursing / Radiological Physics / Computer Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் Ph.d, M.Sc, B.Sc, M.Tech, Post Graduate Diploma, B.C.A போன்ற Degree – களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

டாடா நினைவு மையம் அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 7 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TMC வயது விவரம்:
  • Quality Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Scientific Officer C (Pathology), Medical physicist C பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • Assistant Nursing Superintendent பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Female Nurse A, Scientific Assistant B, Technician C (Central Sterile Supply Department) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Technician A (OT/ ICU) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 27 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
டாடா நினைவு மையம் சம்பள விவரம்:

Quality Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 11 படி ரூ.67,700/- மாத ஊதியமாக தரப்படும்.

Scientific Officer C (Pathology), Medical physicist C, Assistant Nursing Superintendent பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 10 படி ரூ.56,100/- மாத ஊதியமாக தரப்படும்.

Female Nurse A பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 07 படி ரூ.44,900/- மாத ஊதியமாக தரப்படும்.

Scientific Assistant B பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 06 படி ரூ.35,400/- மாத ஊதியமாக தரப்படும்.

Technician A (OT/ ICU) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 02 படி ரூ.19,900/- மாத ஊதியமாக தரப்படும்.

Technician C (Central Sterile Supply Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 04 படி ரூ.25,500/- மாத ஊதியமாக தரப்படும்.

டாடா நினைவு மையம் தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TMC விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

TMC விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயன் பெறலாம். 28.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

TMC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!