TMB வங்கியில் 72 காலிப்பணியிடங்கள் – ரூ.51,618/- மாத சம்பளம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 16.10.2023 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Probationary Clerks பணிக்கான 72 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (6.11.2023) மட்டுமே மீதம் உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TMB வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- TMB வங்கியில் காலியாக உள்ள Probationary Clerks பணிக்கென 72 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Probationary Clerks பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- 31.08.2023 அன்றைய நாளின் படி, Graduate பட்டதாரிகள் 24 வயதுக்குள் உள்ளவராகவும், Post Graduate பட்டதாரிகள் 26 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.51,618/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TMB Bank விண்ணப்பிக்கும் முறை:
Probationary Clerks பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 06.11.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.