TMB தனியார் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
TMB தனியார் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TMB தனியார் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TMB தனியார் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் GM, DGM, Chief Risk Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவை முழுமையாக படித்து விட்டு பின்னர் தங்களது பதிவை எளிமையாக செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnad Mercantile Bank Ltd (TMB)
பணியின் பெயர் GM, DGM, Chief Risk Officer and others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.05.2022 & 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணியிடங்கள்:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள GM, DGM, Chief Risk Officer, Managing Director and Chief Executive Officer, Digital Product Officer (Scale – III) பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TMB கல்வி விவரம்:

Digital Product Officer (Scale – III) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Business, Management, Commerce, Engineering போன்ற பாடப்பிரிவுகளில் Graduate, Post Graduate Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தகுதிகள்:
  • General Manager பணிக்கு அரசு அல்லது தனியார் வங்கியில் Credit பிரிவில் DGM, GM போன்ற பதவிகளில் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • Deputy General Manager, Chief Risk Officer பணிக்கு அரசு அல்லது தனியார் வங்கியில் Priority sector Credit, Risk Management Like Credit, Market பிரிவுகளில் AGM, DGM போன்ற பதவிகளில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Managing Director and Chief Executive Officer பணிக்கு Chief General Manager / General Manager cadre பதவிகளில் 1 வருடம் முதல் 2 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • Digital Product Officer (Scale – III) பணிக்கு Manager (Scale – III) அல்லது அதற்கு சமமான பதவிகளில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
TMB வயது வரம்பு:

GM, DGM, Chief Risk Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Managing Director and Chief Executive Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 62 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Digital Product Officer (Scale – III) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவி, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
TMB தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TMB விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். GM, DGM, Chief Risk Officer, Digital Product Officer (Scale – III) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08.05.2022 என்ற இறுதி நாளுக்குள்ளும், Managing Director and Chief Executive Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள்ளும் விண்ணப்பித்து பயன் பெறவும்.

TMB Notification Link 1

TMB Notification Link 2

TMB Notification Link 3

TMB Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!