
தமிழக வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 15.05.2022 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | திருப்பூர் மாவட்ட வருவாய் துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 24 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் பதவிக்கு என 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அலுவலக உதவியாளர் வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு 53 வரை தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வயது வரம்பு தளர்வு உண்டு.
கல்வி தகுதி:
தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவராகவும், ஒட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். (கட்டாயமல்ல).
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எனில், இப்பதவிக்கு விண்ணப்பித்தல் கூடாது, விண்ணப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையிலேயே நிராகரிக்கப்படும்.
தேர்வு செயல் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் செய்யும் நாள், நேரம் மாறுதலுக்குட்பட்டது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கடைசியாக வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, 15.04.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களுடன் இணைத்தனுப்பப்படும் கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றுகளின் ஒளி நகலில் (குடும்ப அட்டை நகல், வேலை வாய்ப்பக பதிவு நகல், சாதி சான்று நகல், கல்வி மாற்று சான்று நகல், மதிப்பெண் சான்று நகல்) சுயசான்றொப்பமிட்டு அனுப்ப வேண்டும். உரிய சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையிலேயே நிராகரிக்கப்படும்.