தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

திருப்பூர் மாவட்ட வருவாய் துறை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tiruppur Revenue Department
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Revenue Department பணியிடம்:

திருப்பூர் மாவட்ட வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பணிக்கு 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வித் தகுதி:

தமிழக அரசின் திருப்பூர் மாவட்ட வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் வயது வரம்பு:

01.07.2021 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Revenue Department ஊதியம் விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Office Assistant தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசின் திருப்பூர் மாவட்ட வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து விரைவு தபால் அல்லது பதிவஞ்சல் மூலம் 15.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி, அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification & Application PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!