தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்ற அருமையான வாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0
தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்ற அருமையான வாய்ப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்ற அருமையான வாய்ப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்ற அருமையான வாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முழு விவரம் குறித்து பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் செவிலியர், மருத்துவ அலுவலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் 108 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Accenture நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சமாக 50 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு MBBS படித்தவராகவும், செவிலியர் பணியிடத்திற்கு Diploma in GNM/ BSC., (Nursing) படிப்பை முடித்தவராகவும், சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு மற்றும் Multipurpose Halth worker (male) / Health Inspector / Sanitary Inspector course படித்தவராகவும் இருக்க வேண்டும். இதே போன்று மருத்துவமனை பணியாளர் பணியிடத்திற்கு நீங்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு வருகிற 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை கீழே உள்ள PDF இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

அஞ்சல் முகவரி:
  • நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
  • மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 147- பூலுவப்பட்டி பிரிவு,
  • நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641602

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!