திருப்பதி – புதுச்சேரி ரயில் புறப்பாட்டில் தாமதம் – பயணிகள் அவதி!

0
திருப்பதி - புதுச்சேரி ரயில் புறப்பாட்டில் தாமதம் - பயணிகள் அவதி!
திருப்பதி - புதுச்சேரி ரயில் புறப்பாட்டில் தாமதம் - பயணிகள் அவதி!
திருப்பதி – புதுச்சேரி ரயில் புறப்பாட்டில் தாமதம் – பயணிகள் அவதி!

இந்தியாவில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.  இதையடுத்து திருப்பதி – புதுச்சேரி இடையிலான ரயில் மேல் மருவத்தூர் அருகே சிறுநாகலூர் அருகே சென்ற போது நிகழ்ந்த சம்பவத்தினால் ரயில் சிறிது தாமதமாக புறப்பட்டது. இதனால்  பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பயணிகள் அவதி

இந்தியாவில் பொதுபோக்குவரத்தில் ரயில் போக்குவரத்து மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் சாமானிய மக்கள் தினந்தோறும் பயணிக்க ஏதுவாக அமைந்துள்ளது. இதையடுத்து நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

அதனால் தற்போது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்துடன் ரயில்களில் தினந்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதாவது தற்போது IRCTC என்ற ஆப் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. IRCTCயில் கணக்கில் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால் 2 மடங்கு கூடுதலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு – இன்று முதல் அமல்! கிளம்பும் எதிர்ப்பு!

அதாவது ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி-புதுச்சேரி இடையிலான ரயில் மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மயில் ஒன்று ரயில் மீது மோதியது. இதனால் மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து மயிலின் உடலை எடுத்து சென்ற பின் ரயில் புதுச்சேரிக்கு தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here