திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – இனி நடைபாதையில் டிக்கெட்!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - இனி நடைபாதையில் டிக்கெட்!V
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - இனி நடைபாதையில் டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – இனி நடைபாதையில் டிக்கெட்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை சந்திக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தகோடிகள் தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் பலர் நடைபாதை வழியாக வந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான்

நாட்டில் படையெடுத்து வந்த கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி இருந்தனர். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பின்னர் செயல்பட்டு வந்த ஊரடங்கில் நிறைய தளர்வுகளை தெலுங்கானா மாநிலம் கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்களை விநியோகம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்று வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 300 எனவும் தெரிவித்து இருந்தனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இது தவிர நேரில் சென்று இலவச டிக்கெட்கள் வாங்கும் வசதியும் உள்ளது. மேலும் இந்த இலவச தரிசனத்திற்கு டோக்கன்களும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம். இந்த டோக்கன்கள் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தல் மற்றும் நேரில் சென்றும் டிக்கெட்களை பெற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Reliance Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு – தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் இதோ!

இந்த நிலையில் நாட்டில் கொரோனா ஊரடங்கு இருந்த நேரத்திற்கு முன்னர் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர். அதேபோல் தற்போதும் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் கோவில் நிர்வாகம் இந்த கோரிக்கையை ஏற்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!