திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – திருமலை செல்லும் வழித்தடங்கள் சீரமைப்பு!

0
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - திருமலை செல்லும் வழித்தடங்கள் சீரமைப்பு!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - திருமலை செல்லும் வழித்தடங்கள் சீரமைப்பு!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – திருமலை செல்லும் வழித்தடங்கள் சீரமைப்பு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. தற்போது திருமலைக்கு செல்லும் வழித்தடங்களை வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் ஏழுமலையானை தரிக்க எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி:

ஆந்திராவில் பெய்த தொடர் கனமழையால் திருப்பதி திருக்கோயில் முழுவதும் மழைநீர் சூழ்ந்தது வெள்ளம் ஆர்ப்பரித்தது. திருப்பதியில் உள்ள ஏர் பை பாஸ் ரோடு, யுனிவர்சிட்டி ரோடு ஆகிய பகுதிகள் உட்பட அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதனால் கடந்த வாரங்களில் பக்தர்கள் யாரும் திருப்பதிக்கு சுவாமி தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம்? அமைச்சர் விளக்கம்!

மேலும் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மழை நின்ற பிறகு எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது. தற்போது ஆந்திராவில் மழை குறைந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் திருமலை செல்லும் இரண்டு வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள், பழுதடைந்த சாலைகள், அருவிகள் ஆகியவற்றை வல்லுநர் குழு ஆய்வு செய்து வருகிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற நிலச்சரிவுகள் ஏற்படாமல் இருக்க உரிய ஆலோசனைகளை வழங்க தேவஸ்தான செயல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Amazon Prime பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – டிச.13 முதல் சந்தா கட்டணம் உயர்வு!

இதையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு விரிவான அறிக்கை ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. மேலும் தேங்கிய மழைநீர், சாலைகள் சரி செய்யப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் வழக்கம் போல திருப்பதி செல்ல துவங்கியுள்ளனர். திருப்பதிக்கு செல்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று பக்தர்கள் சிலர் கூறுகின்றனர். நவம்பர் 18 முதல் 30 வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் மாற்று தேதிகளில் தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!