திருமலை – திருப்பதி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு? தேவஸ்தானம் எச்சரிக்கை!
திருப்பதி மற்றும் திருமலை கோயில்களில் புதிதாக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வந்திருப்பது குறித்த விளக்கத்தையும் தேவஸ்தானம் அளித்துள்ளது.
தேவஸ்தானம் விளக்கம்:
திருப்பதி கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். சமீப காலமாக கொரோனா கால ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளினால் பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் திருப்பதி கோயிலில் பணிவாய்ப்பு இருப்பதாக விளம்பரங்கள் வெளியானது. அதில் கோயிலில் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், பணிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Post Office ரூ.5000 முதல் முதலீட்டில் அதிக வருமானம் – சூப்பரான 2 திட்டங்கள்! முழு விபரம் இதோ!
இந்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்ததை அறிந்த கோயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் இதனை உண்மை என்று நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று இது தொடர்பான அறிக்கை ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில் திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக வெளியான தகவல்கள் பொய்யானது. இந்த உண்மைக்கு புறம்பான அறிவிப்பை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு சிலர் பொதுமக்களிடம் பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. இது போன்ற மோசடிக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
அப்படி திருப்பதி – திருமலை தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பின் அவற்றை பற்றி கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும். இது பற்றிய தெளிவான விளக்கத்தை இதற்கு முன்னரும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற போலியான அறிவிப்புகளை நம்பி யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதி கோயில் நிர்வாகம் தொடர்பான போலியான விளம்பர அறிவிப்பினால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.