திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆந்திராவில் கொரோனா தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு 11 மணிக்குள் வந்துவிட வேண்டும். பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

பக்தர்கள் கவனத்திற்கு:

நாடு முழுவதும் மூன்றாம் அலையின் துவக்கமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் தொற்று பாதித்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவைகள் அமலில் உள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசில் தரமற்ற பொருட்கள்!

தற்போது ஆந்திராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சுபநிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதனை தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி மற்றும் திரையரங்குகளில் 50 பேர் மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பேருந்துகள், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இரவு 11 மணிக்கு மேல் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு? ஜனவரி 20ம் தேதி அரசு ஆலோசனை!

இருப்பினும் அத்தியாவசிய தேவைகளான உணவு பொருட்கள் பால் உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்றும் டீ கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் போது பெரிய பெரிய வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியில் இருந்து திருப்பதிக்கு தரிசனத்திற்கு பக்தர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இரவு 11 மணிக்குள் கோவிலுக்குள் வந்து விட வேண்டும் மற்றும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here