திருப்பதி தரிசனம் தற்காலிக நிறுத்தம் – தேவஸ்தானம் அறிவிப்பு.!

0
திருப்பதி தரிசனம் தற்காலிக நிறுத்தம்
திருப்பதி தரிசனம் தற்காலிக நிறுத்தம்

திருப்பதி தரிசனம் தற்காலிக நிறுத்தம் – தேவஸ்தானம் அறிவிப்பு.!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவிவரும் வேளையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் மக்கள் தேவையில்லாமல் ஒன்றுகூடுவது மற்றும் மத வழிபாட்டு தளங்களில் மக்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தேவஸ்தானம்

இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 2 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வந்தனர். இதை தொடர்ந்து ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு கோட்டா இன்று வெளியாக இருந்த நிலையில் அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவித்துள்ளது. மேலும் மே 30ம் தேதி வரை தரிசனம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது அதற்கான பணத்தை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியுமா..?

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here