TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – வெற்றி பெற டிப்ஸ்!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - வெற்றி பெற டிப்ஸ்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - வெற்றி பெற டிப்ஸ்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – வெற்றி பெற டிப்ஸ்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க எப்படி படிக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தயாராவது எப்படி:

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்கள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் TNPSC தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4ம் நிலை பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு 7,301 காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, 21 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த குரூப் 4 தேர்வு பணியிடங்கள் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் கடும் போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட உள்ளது. அதன்படி எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழி தகுதித்தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

தேர்வுக்கு தயாராவது எப்படி:

  • குரூப் 4 தேர்வுக்கு தயாராக நினைப்பவர்கள் முதலில், 6 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்தை படிக்க வேண்டும்.
  • அடுத்ததாக கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து வாருங்கள். கணித பகுதிக்கு ஷார்ட் கட் வைத்து படிப்பது நல்லது.
  • பொது அறிவுப் பகுதியில் 10 கேள்விகள் வரை பள்ளி புத்தகங்களை தாண்டி வெளியில் இருந்து கேட்கப்படலாம். ஆனால் அவை பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் மீதமுள்ள 65 க்கும் மேற்பட்ட கேள்விகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் நிச்சயம் வரும்.
  • புவியியல் படிக்கும் போது இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படித்துக் கொண்டால், உங்களுக்கு எப்போதும் மறக்காது.
  • அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள். குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப்புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here