TNPSC Group 2, 2A தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? கடைசி நேரத்தில் இப்படி தயாராகுங்கள்!

0
TNPSC Group 2, 2A தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? கடைசி நேரத்தில் இப்படி தயாராகுங்கள்!
TNPSC Group 2, 2A தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? கடைசி நேரத்தில் இப்படி தயாராகுங்கள்!
TNPSC Group 2, 2A தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? கடைசி நேரத்தில் இப்படி தயாராகுங்கள்!

தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வருகிற சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு நடைபெற இன்னும் சற்று நாட்களே உள்ளதால் கடைசி நேரத்தில் தேர்வர்கள் எவ்வாறு படித்து தேர்வில் சுலபமாக வெற்றி பெற முடியும் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போது குரூப் 2, 2ஏ தேர்வு வருகிற சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!

அதனால் தேர்வுக்கு இதுவரை கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் கடைசி நேரத்தில் நாம் படிப்பதை பொறுத்து தங்களின் தேர்வில் வெற்றி அமைந்துள்ளது. அதன்படி கடைசி கட்ட தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் இனிமேல் புதிதாக எதையும் படிக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே படித்ததையும் மறந்து விடுவீர்கள். அதனால் ஏற்கனவே படித்துள்ளதை நன்றாக ரிவிஷன் செய்தாலே தேர்வில் நீங்கள் சுலபமாக வெற்றி பெறலாம்.

1. முதலில், தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும் என்பதால் தினமும் சிலபஸூக்கு ஏற்றவாறு படித்தவற்றை திருப்பி பார்க்க வேண்டும்.

2. தினமும் திறனறி வினாக்கள் மற்றும் கணித வினாக்களை தினமும் பயிற்சி செய்ய வேண்டும்.

3. அத்துடன் தினமும் ஒரு மாத நடப்பு நிகழ்வுகளை படித்ததை திரும்பி படிக்க வேண்டும்.

4. இதையடுத்து பொது அறிவு பகுதிக்கு சிலபஸில் கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு பாடத்தை திருப்பி படித்து வர வேண்டும்.

Exams Daily Mobile App Download

5. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, அரசியலமைப்பு மற்றும் இந்திய தேசிய இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.

6. ரிவிஷன் செய்வதற்கு குரூப் ஸ்டெடி சிறந்த முறையாகும். அதனால் 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ரிவிஷன் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

7. ரிவிஷன் செய்யும் போது வரி வரியாக படிக்காமல் முக்கியமானவற்றை மட்டும் படிக்க வேண்டும். இது உங்களுக்கு தேர்வில் குழப்பமில்லாமல் விடையளிக்க உதவியாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!