வங்கி கடன் தவணை (EMI) செலுத்த அவகாசம் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

3
வங்கி கடன் தவணை (EMI) செலுத்த அவகாசம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
வங்கி கடன் தவணை (EMI) செலுத்த அவகாசம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
வங்கி கடன் தவணை (EMI) செலுத்த அவகாசம் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட கடன் தவணைகளை (EMI) செலுத்த அவகாசம் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

கால அவகாசம்:

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கினால் பொதுமக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு காலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் தவணையை செலுத்துவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்துகள் இயங்க அனுமதி – மே 24 முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு!

வழக்கின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. அந்த மனுவில், கொரோனா தொற்று பாதிப்பு நாட்டில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காலத்தில் மக்கள் தாங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் தொகையை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இந்த காலகட்டத்தில் கடன் தொகை மற்றும் வட்டி பணத்தை செலுத்த மக்கள் மீது எந்த வங்கியும், நிதி நிறுவனமும் அவர்களின் சொத்துக்களை ஏலம் விடாமல் தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இவர்களின் வங்கி கணக்கை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது. தொற்று நிறைந்துள்ள தற்போதைய சூழலில் மக்களுக்கு இது தொடர்பாக எந்த வித அழுத்தமும் கொடுக்க கூடாது. மக்கள் தங்கள் சுயமரியாதையுடன் மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும். இதனால் 6 மாதங்களுக்கு அவகாசம் அல்லது கொரோனா பரவல் சூழல் முடியும் வரை கடன் தவணைகளை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் மே 24ம் தேதி விடுமுறைக்கால நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் ..சுயதொழில் செய்யாமல் எப்படி வங்கியில் பணம் செலுத்த முடியும்..தயவு செய்து கால அவகாசம் தர வேண்டும் தாழ்மையுடன் கேட்கிறேன்

  2. இது நடந்திட்டால் இவ் ஆட்சியே சிறந்த ஆட்சி என எல்லோராலும் பேசப்படும்……

  3. வணக்கம் தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த கொரானா காலகட்டத்தில் நடுத்தர விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் மகளிர் குழுபிரைவேட் வங்கிகளில் கடன் பெற்று உள்ளார்கள் பஜாஜ் பைனான்ஸ் EMI கட்ட முடியாமல் தவிக்கிறார்கள் எனவே ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் தமிழக முதல்வர் இதற்கான ஆணையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!