செப்., 21 ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
செப்., 21 ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
செப்., 21 ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
செப்., 21 ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டேராடூன் மாவட்டத்தில் செப்டம்பர் 21ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து பொதுசேவைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்திற்கும் அரசு தடை விதித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.

நாடு முழுவதும் 75.81 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்!

கொரோனா பரவலின் வேகம் குறைந்து இயல்பு நிலை மெல்ல திரும்பி வருவதால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை காரணமாக டேராடூன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், செப்டம்பர் 21 வரை டேராடூன் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வார இறுதி நாள்களில் 15,000 சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களும் 72 மணிநேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த சான்றிதழை வைத்திருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு அனுமதி இல்லை. அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here