இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் Tik Tok? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை!

0
இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் Tik Tok? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை!
இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் Tik Tok? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை!
இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் Tik Tok? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை!

Tik Tok செயலி மீதான தடைகளை நீக்கி அவற்றை மீண்டும் செயல்படுத்தலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவிலும் Tik Tok செயலியை பயன்படுத்துவதற்காக மத்திய அரசின் அனுமதியை பெற அந்நிறுவனம் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது.

Tik Tok செயலி

சீன செயலியான Tik Tok பாரம்பரிய, கலாச்சார நிகழ்வுகளை தவறாக பயன்படுத்துவதாகவும், அவற்றை மேலும் ஊக்குவிப்பதாகவும் கூறி அந்த செயலியின் பயன்பாடுகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதே போல அமெரிக்க அரசும், இது போன்ற சில காரணங்களை முன்வைத்து இந்த செயலியை தடை செய்தது. இதற்கிடையில், அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, Tik Tok செயலி மீதான தடைகளை நீக்கியுள்ளது. இதை தொடர்ந்து அந்நாட்டில் Tik Tok செயலி மீண்டுமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் – எய்ம்ஸ் இயக்குநர் கருத்து !!

இதன் அடிப்படையில், இந்தியாவிலும் Tik Tok செயலியை முன்னிறுத்துவதற்கான முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில், Tik Tok செயலியின் தலைமை நிறுவனமான பையிட்டான்ஸ், மத்திய அரசின் சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்தியாவில் செயல்பட தயாராக இருப்பதாகவும், அந்த வகையில் TIKTOK மீதான தடைகளை நீக்கி மீண்டும் அச்செயலியின் உபயோகத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ள Tik Tok நிறுவனம், பதில் கடிதத்தை எதிர்பார்த்துள்ளது. எனினும் Tik Tok மீதான தடை அமெரிக்காவில் நீக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலும் அந்நிறுவனத்துக்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலியின் பயன்பாடு இல்லை என்றாலும் அந்நிறுவனத்தில் இன்னும் சுமார் 1000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதாவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வர்த்தகத்திற்காக அந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!