TIDCO கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

TIDCO கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் Assistant Manager பணிக்கு சில பிரிவுகளின் கீழ் மொத்தமாக 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு ஏற்றார்ப்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் குறைந்தது 5 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 26 வயது என்றும், அதிகபட்சம் 35 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து shortlisted செய்யப்படுவார்கள், அதன்பின் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!