தமிழகத்தில் டைடல் பார்க் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – ஆட்சியர் பேட்டி!

0
தமிழகத்தில் டைடல் பார்க் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர் பேட்டி!
தமிழகத்தில் டைடல் பார்க் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர் பேட்டி!
தமிழகத்தில் டைடல் பார்க் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – ஆட்சியர் பேட்டி!

தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களான திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் “மினி டைடல் பூங்காக்கள்” (Neo Tidel Parks) அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. இந்தப் பூங்காக்கள் செயல்படத் துவங்கும் போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:

தமிழ்நாட்டில் இருக்கின்ற திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், உலகளாவிய பங்களிப்புடன் “அறிவுசார் நகரம்”ஒன்று உருவாக்கப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடந்த விழாவில் திருப்பூரில் டைடல் பார்க் அமைக்க முதல்வர் கையால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக அவிநாசி தாலுகா திருமுருகன்பூண்டியில் 1.77 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதை உள்ளடக்கிய இந்த திராவிட மாடல் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது எனப் பேசினார். மேலும் 295 பில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. உற்பத்தியில், அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது எனவும் பேசியிருந்தார்.

B.E / B.Tech Degree முடித்தவர்களுக்கு தனியார் நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

மேலும் திருப்பூர் டைடல் பார்க் வளாகம், தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைகிறது. அதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. டைடல் பார்க் துவங்கப்பட்டால், அது திருப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருக்கும் என்கின்றனர் தொழில்துறையினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கலெக்டர் வினீத் கூறியது , முதல்வர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் 1.77 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தது. டைடல் பார்க் திட்ட செயல் இயக்குனர் குமார் நேரில் வந்து அத்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி சென்றார். இந்த பார்க் அமைவதன் மூலம் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here