தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உண்டு – புதிய ட்விஸ்ட்!

0
தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உண்டு - புதிய ட்விஸ்ட்!
தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உண்டு - புதிய ட்விஸ்ட்!
தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உண்டு – புதிய ட்விஸ்ட்!

தமிழ்நாட்டில் இனி அரசு பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக போக்குவரத்துத் துறை மீண்டும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிக்கெட் கட்டாயம்:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு இன்று (மே 10) வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மே 5ம் தேதி போக்குவரத்துத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த வரிசையில், தமிழகத்தில் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

PM கிசான் பயனர்கள் கவனத்திற்கு – 11வது தவணைப்பணம் தாமதமாக வருவதற்கான காரணங்கள் இதுதான்!

தமிழ்நாட்டில் இதுவரை 3 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பயணித்து வருகிறார்கள். மேலும் 4-12 வயதுடையவர்களுக்கும் தற்போது அரை கட்டணம் முறையில் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், இனிமேல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த அறிவிப்பு குறித்து பிரபல நாளிதழில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான பயணச்சீட்டு ரத்து பற்றி பொதுமக்கள் சிலரின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே இது குறித்து போக்குவரத்து துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் எதும் பெறப்படமாட்டாது என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சிலர் தங்களது குழந்தைகளை மடியில் அழைத்துச் செல்வது அசௌகரியம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். எனவே விருப்பமுள்ளவர்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்குப் பயணச்சீட்டு பெற்று கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அவர்களது குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும். மேலும், பயணிகள் பயணிக்கும் போது அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். எனவே, தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் அரைக்கட்டணம சம்பந்தமாக, 3 வயது முதல் 12 வயது என்பதற்குப் பதிலாக, 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக்கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!