தமிழக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு – பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. இலவச எண்கள் அறிவிப்பு!

0
தமிழக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு - பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. இலவச எண்கள் அறிவிப்பு!
தமிழக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு - பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. இலவச எண்கள் அறிவிப்பு!
தமிழக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு – பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. இலவச எண்கள் அறிவிப்பு!

தமிழக ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம்:

தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றனர். பண்டிகை தினங்களை தாண்டி சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் இவ்வாறு கட்டணத்தை உயர்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

தமிழக இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் அறிவிப்பு – மாத உதவித்தொகை வழங்கல்! விண்ணப்பம் வரவேற்பு!

Follow our Instagram for more Latest Updates

இந்த கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிடுபவர்கள் பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் டிக்கெட் விலையை உயர்த்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் 044 2474 9002, 044 2628 0445 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!