திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் நியூஸ் – டிக்கெட் விலை உயர்வு!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் நியூஸ் - டிக்கெட் விலை உயர்வு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் நியூஸ் - டிக்கெட் விலை உயர்வு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் நியூஸ் – டிக்கெட் விலை உயர்வு!

கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தரிசன டிக்கெட் விலையை தேவஸ்தான குழுவினர் உயர்த்தியுள்ளனர்.

டிக்கெட் விலை உயர்வு:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை மற்றும் உண்டிலுக்கு காணிக்கை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தற்போது இந்தியா முழுவதுமே கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டியில் KKR உடன் மோதல்!

கடந்த சில நாட்களாகவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்துள்ளனர். 28,751 பக்தர்கள் தலைமுடி காணிக்கையும் செலுத்தியுள்ளனர். ஒருநாள் உண்டியல் வருமானம் மட்டுமே ரூ.5 கோடியே 41 லட்சம் கிடைத்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தற்போது தரிசன டிக்கெட்டின் விலையை உயர்த்துவது குறித்து திட்டமிட்டுள்ளனர். தற்போது தரிசன டிக்கெட் விலையை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

அதாவது ரூ.120க்கு வழங்கப்பட்டு வந்த சுப்ரபாத சேவை டிக்கெட் விலை ரூ.2000ஆகவும், கோவிலுக்குள் அமர்ந்து சுவாமியை அர்ச்சனை செய்யக்கூடிய ரூ.200 மதிப்புள்ள டிக்கெட் ரூ.5000ஆகவும், ரங்கநாயக மண்டபத்தில் வழங்கப்பட்டு வந்த வேத ஆசீர்வாத டிக்கெட் விலை ரூ.3000த்தில் இருந்து ரூ.10000 ஆகவும், கல்யாண உற்சவ டிக்கெட் விலை ரூ. 1000த்தில் இருந்து ரூ.2500 ஆகவும், வெள்ளிக்கிழமை அன்று நடக்கும் வஸ்திரசேவைக்கான டிக்கெட் ரூ. 52000த்தில் இருந்து ரூ.1,02,000 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை அன்று நடைபெறும் திருப்பாவாடை சேவைக்கு பிரசாதமாக வழங்கப்படும் ஜிலேபி ரூ. 100 ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த டிக்கெட் விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!