தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை – வானிலை மையம் அறிக்கை!

கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 14 நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு – புதிய கால அட்டவணை எப்போது?

07.08.2022, 08.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர்‌, மதுரை, மற்றும்‌ ஏனைய வடதமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை
பெய்யக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

09.08.2022, 10.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வடதமிழக கடலோரமாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

11.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும்‌ ஏனைய வடதமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. மேலும் நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!