Threads செயலியின் புதிய அப்டேட் – இனி இன்ஸ்டாகிராமுக்கு பாதிப்பு இல்லை!!
இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் Threads செயலியில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
Threads செயலி:
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக த்ரெட்ஸ் (Threads) செயலியை அறிமுகம் செய்தார். அதாவது, இன்ஸ்டாகிராமை மையமாகக் கொண்டு Threads செயலி உருவாக்கம் செய்யப்பட்டது. இதனால், பயனர்கள் Threads செயலியை மொத்தமாக Delete செய்ய நினைத்தால் இன்ஸ்டாகிராம் கணக்கும் Delete ஆகிவிடும்படியாக இருந்தது.
தமிழக மக்களே.., அரசு வேலை கிடைக்க உங்களுக்கான பம்பர் அறிவிப்பு.., உடனே முந்துங்க!!
இந்நிலையில், தற்போது பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் கணக்கை இழக்காமல் Threads செயலியை மட்டும் Delete அல்லது Deactivate செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் அப்டேட்டை கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் பெற்று பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.