தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.60,000/-
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Hospital Quality Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-03-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை |
பணியின் பெயர் | Hospital Quality Manager |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
GMCH காலிப்பணியிடங்கள்:
Hospital Quality Manager – 1 பணியிடம்
கல்வித் தகுதி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் மருத்துவமனை நிர்வாகம்/ சுகாதார மேலாண்மை/ பொது சுகாதாரம் ஆகியவற்றில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 17-03-2023 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Manager பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் தலைவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி-628008 என்ற முகவரிக்கு 31-மார்ச்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.