இந்த வார TRP ரேட்டிங் – ‘கண்ணான கண்ணே’ சீரியல் முதலிடம், ரசிகர்கள் வாழ்த்து!

1
இந்த வார TRP ரேட்டிங் - 'கண்ணான கண்ணே' சீரியல் முதலிடம், ரசிகர்கள் வாழ்த்து!
இந்த வார TRP ரேட்டிங் - 'கண்ணான கண்ணே' சீரியல் முதலிடம், ரசிகர்கள் வாழ்த்து!
இந்த வார TRP ரேட்டிங் – ‘கண்ணான கண்ணே’ சீரியல் முதலிடம், ரசிகர்கள் வாழ்த்து!

இந்த வாரம் சின்னத்திரை சீரியலில் சன் டிவியில் இதுவரை ரேட்டிங்கில் வராத கண்ணான கண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.

சீரியல் ரேட்டிங்:

கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சினிமா பார்ப்பதை விட சீரியல் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முன்னணி தொலைக்காட்சிகள் புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் மக்களிடம் விறுவிறுப்பை அதிகரிக்க முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 39,097 பேருக்கு கொரோனா – 546 பேர் பலி!

மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களை விட வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கின் அடிப்படையில் தான் எந்த சீரியல் அதிகளவில் வரவேற்பை பெறுகிறது என்பது தெரியும். வழக்கமாக டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களே இடம் பிடித்து வருகின்றன. மேலும் இந்த இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மாறி மாறி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி சீரியலே முதலிடம் பிடித்துள்ளது.

ஆனால் வழக்கமாக இல்லாமல் இதில் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது வழக்கமாக சன் டிவியில் வரும் ரோஜா சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களுக்குள் வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வாரம் ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி கண்ணான கண்னே சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற யுவா திருமணம் தான். யுவாவுக்கு யாருடன் திருமணம் நடைபெறும் என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்ததே இதற்கு காரணம்.

ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பும் பாரதி – இன்றைய எபிசோட்!

இதுவரை இந்த சீரியல் டாப் 5 லிஸ்டில் கூட இருந்தது இல்லை. இந்த வாரம் கண்ணான கண்ணே சீரியல் தற்போது முதலிடம் பிடித்து இருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது குறித்து இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் ப்ரீத்தியாக நடித்து வரும் அக்ஷிதா ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது கண்ணான கண்கே சீரியலுக்கு 11.08 புள்ளிகள் கிடைத்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ரோஜா, மூன்றாம் இடத்தில் விஜய் டிவி சீரியல் பாரதி கண்ணம்மா உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!