அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – சலுகைகளை பெற இந்த அப்டேட் முக்கியம்!
ரேஷன் கார்டு பல இடங்களில் அடையாள ஆவணமாகவும், முகவரி சான்றிதழாகவும் பயன்படுகிறது. அந்த வகையில் ஆன்லைனில், எந்த ஒரு அலைச்சலும் இல்லாமல் புதியவர்கள் பெயரை சேர்த்து, 20 நாட்களில் ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளன.
முக்கிய அப்டேட்:
இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டை உள்ளது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அட்டை வாயிலாக கொரோனா நிவாரண நிதி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மக்களுடைய அனைத்து தேவைகளுக்கும் ரேஷன் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையில், புதிதாக திருமணம் ஆனவர்கள் கணவரின் பெயர் அல்லது மனைவியின் பெயரை சேர்ப்பது அவசியம் ஆகும்.
TN Job “FB
Group” Join Now
அதன்படி புதிய ரேஷன் அட்டைகளை பெற விரும்புபவர்கள் பழைய ரேஷன் கார்டுகளில் உள்ள பெயரை நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு பயனரின் திருமண பதிவுச் சான்று கட்டாயம். அதேபோல் ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டுமென்றால் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகும். அதேபோல் புதிய ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக சேர்க்க உள்ளவர்களின் புகைப்படத்தை 5 MB அளவிற்கு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வீட்டு வரி, வாடகை ஒப்பந்த பத்திரம், கேஸ் இணைப்பு, வாடகை ரசீது உள்ளிட்ட இணைப்பு தகவல்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் கோடை விடுமுறை!
1. ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க ,முதலில் உங்கள் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ https://tnpds.gov.in/ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. வலது புறத்தில் இருக்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. அங்கு உங்களுடைய மொபைல் எண் மற்றும் அங்கு தோன்றும் கேப்சா குறீயீடுகளை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
3. அதில் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு தேவையான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும்.
4. இறுதியாக OTP சரிபார்க்கப்பட்டு உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.