அதிகரிக்கும் UPI மோசடி.. உங்கள் பணத்தை பாதுகாக்க இதுதான் வழி – State Bank கொடுத்த டிப்ஸ்!

0
அதிகரிக்கும் UPI மோசடி.. உங்கள் பணத்தை பாதுகாக்க இதுதான் வழி - State Bank கொடுத்த டிப்ஸ்!
அதிகரிக்கும் UPI மோசடி.. உங்கள் பணத்தை பாதுகாக்க இதுதான் வழி - State Bank கொடுத்த டிப்ஸ்!அதிகரிக்கும் UPI மோசடி.. உங்கள் பணத்தை பாதுகாக்க இதுதான் வழி - State Bank கொடுத்த டிப்ஸ்!
அதிகரிக்கும் UPI மோசடி.. உங்கள் பணத்தை பாதுகாக்க இதுதான் வழி – State Bank கொடுத்த டிப்ஸ்!

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலினால் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யும் முறை அதிகரித்துள்ளது. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளால் மோசடிகளும் அதிகரித்து வரும் நிலையில், UPI மோசடியிலிருந்து உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்களை SBI அறிவித்துள்ளது.

UPI மோசடிகள்:

டிஜிட்டல் இந்தியா திட்டம் அமலானது முதல், அனைத்து சேவைகளும் ஆன்லைன் முறையில் மாறிவிட்டது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் பலர் UPI பரிவர்த்தனைகளை செய்ய பழகிவிட்டனர். மேலும் இதனால் நேரம் அதிகம் வீணாகாமல் இருப்பதால் மக்களுக்கு பயனுள்ளதாக UPI பரிவர்த்தனைகள் இருக்கிறது. இது குறித்து நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்ட தகவலின் படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.10.7 டிரில்லியனாக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு பக்கம் நல்ல விஷயம் இருந்தாலும் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 13,951 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகி இருக்கிறது. மேலும் ரூ.76.49 கோடி வரை நிதி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எளிமையாக இருந்தாலும், மறுபக்கம் அதனால் பல ஆபத்துகள் ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இது இலவசம் – வரவேற்கும் மக்கள்! இனி கவலையே இல்ல!

இந்நிலையில் UPI மோசடி குறித்து பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) UPI செக்யூரிட்டி டிப்ஸ்களை தன்னுடைய அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன் படி UPI பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் போது அல்லது செய்யும் போது இந்த பாதுகாப்பு குறிப்புகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என SBI தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
SBI செக்யூரிட்டி டிப்ஸ்:
  • நீங்கள் UPI மூலமாக பணம் அனுப்புவதற்கு முன், சரியான நபருக்கு தான் அனுப்புகிறீர்களா என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும்,
  • நீங்கள் பணத்தை பெற வேண்டும் என்றால், அதற்கு UPI பின் தேவை இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
  • மேலும் உங்களது UPI நம்பரை யாருடையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
  • தன்னிச்சையான மற்றும் அறியப்படாத Collect Request வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
  • மேலும் உங்களது UPI Pin-ஐ அடிக்கடி மாற்ற வேண்டும்
  • QR code மூலம் பணம் செலுத்தும் போது பணம் பெறுபவரின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என பார்த்து பின் பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!