தங்க நகை வாங்க இதுவே சரியான தருணம் – இன்றைய விலை நிலவரம் என்ன? விவரம் இதோ!

0
தங்க நகை வாங்க இதுவே சரியான தருணம் - இன்றைய விலை நிலவரம் என்ன? விவரம் இதோ!
தங்க நகை வாங்க இதுவே சரியான தருணம் - இன்றைய விலை நிலவரம் என்ன? விவரம் இதோ!
தங்க நகை வாங்க இதுவே சரியான தருணம் – இன்றைய விலை நிலவரம் என்ன? விவரம் இதோ!

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலமாகவே குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் தங்க அணிகலன்களை விரும்பும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை:

தங்கம் விலையானது அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. இந்த நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவாலும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இதற்கு மத்தியில் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக டாலரின் மதிப்பு வலுவிழந்து வருகிறது.

அதனால் ஒரு மாத காலமாக ஆபரணத்தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. கடந்த மாதத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,610க்கும், ஒரு சவரன் ரூ.36,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்தியாவில் விழா காலம் என்பதால் தங்கம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றது போல அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அதனால் தங்கம் விலை பழைய நிலையை அடைந்து வருகிறது. நேற்றைய தினம் (அக்.9) ஒரு கிராம் தங்கம் ரூ. 40 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 38,720க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

உலகில் 65.61 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இன்று (அக்.10) எதிர்பாராத விதமாக சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 280 குறைந்து ரூ. 38,440க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.4805க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை 1.20 காசுகள் குறைந்து கிராம் ரூ. 64.80க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1200 குறைந்து ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!