மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதியுதவி கிடைக்கவில்லையா? காரணம் இது தான்!

0
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதியுதவி கிடைக்கவில்லையா? காரணம் இது தான்!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதியுதவி கிடைக்கவில்லையா? காரணம் இது தான்!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதியுதவி கிடைக்கவில்லையா? காரணம் இது தான்!

மத்திய அரசின் PM கிசான் நிதி திட்டத்தின் 11வது தவணைப்பணமான ரூ.2000 இன்னும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் குறித்த சில விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கிசான் திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 11வது தவணை நிதிப்பலனை பிரதமர் நரேந்திர மோடி மே 31 அன்று வெளியிட்டார். இதன் மூலம் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவசாய பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.21,000 கோடி பணம் வங்கி கணக்கில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இந்த பணம் டெலிவரி செய்யப்படும். இப்போது PM கிசான் பணம் வங்கி கணக்கில் அனுப்பப்பட்ட பிறகும் ஒரு சில அந்த பணத்தை பெறவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் இப்போது பணம் கிடைக்காததற்கு ஒரு சில காரணங்கள் இருக்கிறது. இதில் முதலாவதாக PM கிசான் திட்டத்தில் விண்ணப்பிக்கும் போது, உங்கள் பெயரை தவறாக எழுதியிருந்தால் அதற்கான ஆவணங்கள் பொருந்தாமல் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் பணம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அடுத்ததாக, உங்கள் முகவரி அல்லது ஆதார் விவரங்கள் தவறாக இருந்தால் அதை உங்கள் PM கிசான் கணக்கில் திருத்த வேண்டும். இது தவிர முழுமையடையாத e-KYC மூலமும் நிதிப்பணம் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். இப்போது இ-கேஒய்சியை முடிப்பதற்கான கடைசித் தேதியை அரசாங்கம் ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் ரொக்கப் பரிமாற்றம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த நிதிப்பலன்கள் 2 ஹெக்டேர் வரை நிலம் பெற்றுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் நிலம் வைத்திருக்கும் நிறுவனங்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாயக் குடும்பங்கள், ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தன்னாட்சி அமைப்புகள் இந்த நிதிப்பலனை பெற முடியாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!