அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17 வரை விடுமுறை நீட்டிப்பு – காரணம் இது தான்!

0
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17 வரை விடுமுறை நீட்டிப்பு - காரணம் இது தான்!
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17 வரை விடுமுறை நீட்டிப்பு - காரணம் இது தான்!
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17 வரை விடுமுறை நீட்டிப்பு – காரணம் இது தான்!

கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள விடுமுறையை ஜுலை 17ம் தேதி வரைக்கும் நீடிக்க இருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 11 முதல் 13 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை தொடர்பான பாதிப்புகள் இன்னும் சரி செய்யப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஜூலை 17ம் தேதி வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தொடர்பாக வெளியிடப்பட்ட புதிய உத்தரவின்படி, ‘தெலுங்கானாவில் இடைவிடாத கனமழையை கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூன் 17 வரை மூடப்படும். அந்த வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் 14.7.2022 முதல் 16.7.2022 வரை விடுமுறையை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் 18.07.2022 முதல் மீண்டும் திறக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் – முக்கிய அறிவிப்பு!

இதற்கிடையில் அம்மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அந்த வகையில் இப்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, கிராமங்களுக்கு இடையேயான சாலை இணைப்புகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. தவிர அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அவசியமானால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!